Politics
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,
செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை (OMR) அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவருவப்படத்திற்கு, 200-வது வார்டு மன்ற உறுப்பினர் அ.முருகேசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக, இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செம்மஞ்சேரி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சிறப்பு குழந்தைகளின் சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணியை, சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லயன் ச.அரவிந்த் ரமேஷ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, செம்மஞ்சேரி ஹவுஸிங் போர்டு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவியருக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் ஆகியவற்றை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லயன் ச.அரவிந்த் ரமேஷ் வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செம்மஞ்சேரி ஹவுஸிங் போர்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் திமுக-வின் 200வது வார்டு வட்ட செயலாளர் ஆர்.நாகரஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செம்மஞ்சேரி ஹரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.