General

விஜய்யின் வருமானம், முதலீடு எவ்வளவு தெரியுமா? சொத்து விவரம் முழுமையாக!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.

வழக்கமாக வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரம் இணையத்தில் பதிவேற்றப்படும்.

அதன்படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் விஜய்யின் பிரமாண பத்திரம் பொதுவெளியில் கிடைத்துள்ளது.

அதில் உள்ள தகவலின்படி,

விஜய் வருமான வரித் தாக்கல் விவரங்களின்படி அவரது ஆண்டு வருமானம்,

2024-2025: ரூ.184.53 கோடி

2023-2024: ரூ.105.69 கோடி

2022-2023: ரூ.198.71 கோடி

2021-2022: ரூ.237.46 கோடி

2020-2021: ரூ.8.04 கோடி

மொத்த அசையும் சொத்தின் மதிப்பு : ரூ.404 கோடி

அசையா சொத்துகள் : ரூ.115 கோடி

சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலை ரூ. 92,76,03,409

கையிருப்பில் இருக்கும் ரொக்கம் : ரூ.2,00,000

குற்ற வழக்குகள் ஏதும் தன் பெயரில் இல்லை.

தனது மனைவி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள்

2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக உள்ளது.

தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருக்கிறது

135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருக்கிறது

கொடைக்கானலில் 2 பங்களா உள்ளது

தனது பெயரில் கடன் எதுவும் இல்லை உள்ளிட்ட தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும்,
மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும், மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடியும் கடன்/முன்பணம் கொடுத்துள்ளதாக அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version