Politics

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் மற்றும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில்…

மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, நாடெங்கிலும் உள்ள அதிமுக தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை புறநகர் மாவட்ட கழகத்தின் கழக அம்மா பேரவை சார்பில், புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் மற்றும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோவிலம்பாக்கம் அலுவல வளாகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும்  இனிப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக சிக்கன் பிரியாணியும், பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக புடவையும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில், சோழங்கநல்லூர் வடக்கு பகுதி கழக செயலாளர் சி.எம்.ஜானகிராமன், சோழங்கநல்லூர் தெற்கு பகுதி கழக செயலாளர் வி.குமார், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன், பரங்கிமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரேகா ஆர்.செல்வராஜ், சுமதி சற்குணன், தீபா ரங்கநாதன் உள்ளிட்ட மாவட்ட கழக, ஒன்றிய, பகுதிகளாக செயலாளர்கள்,  கழகத்தின் மூத்த நிர்வாகிகள், தொண்டர் அணியினர் மற்றும் பிற அணியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version