Politics

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் உள்ள அதிமுக தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், சென்னை புறநகர் மாவட்ட கழக கட்சி அலுவல வளாகத்தில் கழக கொடி ஏற்றி வைத்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும்  இனிப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அனைவருக்கும் காலை சிற்றுண்டியும்  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், 182வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.கே.சதீஷ்குமார், 182 வது வார்டு மேற்கு வட்ட கழக செயலாளர் எம்.வெங்கடேசன், நகரக் கழக செயலாளர் சி.எம்.ஜானகிராமன், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, பகுதிகளாக செயலாளர்கள்,  கழகத்தின் மூத்த நிர்வாகிகள், தொண்டர் அணியினர் மற்றும் பிற அணியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.பி.கந்தன் மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version