Politics
அண்ணாமலைக்கு ‘குட்பை’.. மீண்டும் பாஜக திரும்பிய 25 முக்கிய நிர்வாகிகள்! சைலன்ட் வேலை செய்த நயினார்

பாஜகவில் இருந்துஅண்ணாமலை விலகிய நிலையில் பல நிர்வாகிகள் ராஜினாமா செய்து அவரது ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்தனர். இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சைலன்ட்டாக காய்நகர்த்தி அண்ணாமலையை நோக்கி சென்ற பாஜகவின் 25 முக்கிய நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். அவர் ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கி அதில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார். இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி மொத்தம் 19 லட்சத்து 50 ஆயிரத்து 60 பேர் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்த அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனால் பாஜகவில் இருந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் தங்களின் பொறுப்புகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதோடு அண்ணாமலையின் பின்னால் அணிவகுத்ததோடு, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்து வருகின்றனர்.
அண்ணாமலை கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் பாஜகவில் இருந்து விலகிய பிறகு மீண்டும் தீவிர அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை அமைதி காத்து வருகிறார். பொள்ளாச்சியில் கடந்த ஜூலை 12ம் தேதி ‘வி தி லீடர்ஸ்’ சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக மட்டுமே மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்பிறகு தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கங்களில் மட்டுமே கருத்து தெரிவித்து வருகிறார் அண்ணாமலை.
இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரது கட்சி தொடர்பான அறிவிப்பை எதிர்நோக்கி காத்துள்ளனர். இப்படியான சூழலில் தான் அண்ணாமலைக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். அண்ணாமலையை நம்பி பாஜகவில் இருந்து விலகி சென்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 25 முக்கிய நிர்வாகிகளை நயினார் நாகேந்திரன் மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார். இவர்கள் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். அவர்களின் விபரம் வருமாறு:
- மாவட்ட ஓபிசி பிரிவின் மாவட்ட பொது செயலாளர் வெங்கடேஷ்
- புரோட்டோகால் பிரிவின் மாவட்ட செயலாளர் ஏ பேச்சிமுத்து
- புரோட்டோகால் பிரிவின் மாவட்ட செயலாளர் கோவிந்த ராஜன்
- என்ஜிஓ பிரிவின் மாவட்ட செயலாளர் எஸ் பட்டு ராஜா
- கிழக்கு மண்டல் செயலாளர் முத்துகுமார்
*.ஓபிசி பிரிவின் கிழக்கு மண்டல் தலைவர் எஸ் மாரீஸ்வரன்
- இளைஞர் அணியின் மேற்கு மண்டல தலைவர் வேல் முருகன்
- ஊடக பிரிவின் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார்
- ஓபிசி பிரிவின் மண்டல் துணை தலைவர் மாரியப்பான்
- மீடியா பிரிவின் மண்டல் தலைவர் வெள்ளபாண்டி
- மண்டல் செயலாளர் பாலா
- முன்னாள் ஓபிசி பிரிவின் மண்டல தலைவர் எம் மணி
- முன்னாள் மண்டல் பொது செயலாளர் காளிராஜ்
*முன்னாள் மண்டல் செயலாளர் சதீஷ் மாகாதேவன்
இவர்கள் தவிர பூத் தலைவர்களான ராஜி, மணிகண்டன், ஹரிபிரசாத், சங்கர், விக்கி, எஸ் பெருமாள், சி சுடலை முத்து, செந்தில் யாதவ் உள்ளிட்டவர்கள் பாஜக திரும்பி உள்ளனர். அதேபோல் ஓபிசி பிரிவின் மாவட்ட செயல் கமிட்டி உறுப்பினர் செண்டு குமார், அருணாச்சலம், உறுப்பினர்கருப்பசாமி உள்ளிட்ட 25 பேர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிய பிறகு தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்து ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்தனர். தற்போது அவர்கள் அங்கிருந்து மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் தோல்வியால் பதவி பறிப்போய்விடும் என்ற பீதியில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு இது பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. அதேவேளையில் புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் உள்ள அண்ணாமலைக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.