Politics

மேகதாது விவகாரம்: பட வசூல் பாதிக்கும் என்ற பயமா? – விஜய்யை விளாசிய உதயநிதி

மேகதாது அணை பிரச்சனையில் டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி மேகதாது அணை குறித்து எழுத்துப் பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு. கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உதயநிதி தனது எக்ஸ் பதிவில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த Sofa Model முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை – விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.

எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version