Politics

நாகர் கோயிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். நாகர்கோவில் வேப்பமேடு பகுதியிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ரோடு ஷோ நடைபெற்றது. சாலையின் இருபுறமும் இருந்த பாஜக தொண்டர்கள் பூத்தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

மோடியின் பிரச்சார வாகனத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவில் வருகை தந்தார்.

ரோடு ஷோவின்போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version