General

ரீகல் ஜூவல்லர்ஸ் தனது முதல் தமிழக கிளையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்து,  பார்வையிட்டார்.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல நகை விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லர்ஸ் தனது முதல் தமிழக கிளையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்து, கடையை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கணேஷ், கேரளா மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் முதல் கிளையை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரியிலும் கிளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். […]

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல நகை விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லர்ஸ் தனது முதல் தமிழக கிளையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்து, கடையை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கணேஷ்,

கேரளா மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் முதல் கிளையை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரியிலும் கிளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கால்பதித்திருப்பது நிறுவனத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரீகல் ஜூவல்லர்ஸ் தயாரிக்கும் நகைகளையே நேரடியாக விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்களுக்கு தரமான நகைகளை குறைந்த விலையில் வழங்க முடியும் என்றார்.

மேலும் தங்கத்தின் விலையை மாற்ற முடியாது என்றாலும், செய்கூலி மற்றும் சேதாரக் கட்டணங்களில் மாற்றம் செய்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என தெரிவித்தவர் வரும் முகூர்த்த காலத்தில் 25 ஏழை ஜோடிகளுக்கு ரீகல் ஜூவல்லர்ஸ் சார்பில் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதேப்போன்று, தங்கள் நிறுவனம் யாருடனும் போட்டியிட வரவில்லை என்றும், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ளதைப் போல, தமிழகத்திலும் எதிர்காலத்தில் நகை தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்,

கேரளா மற்றும் கர்நாடகாவில் தரமான நகைகளை நியாயமான விலையில் விற்பனை செய்து நல்ல பெயரை பெற்றுள்ள ரீகல் ஜூவல்லர்ஸ், தற்போது தமிழகத்திலும் தனது சேவையை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள், தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு தரமான தங்கம் நியாயமான விலையில் கிடைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் ஆனந்தின் பாதுகாப்பில் இந்த பகுதியும் வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், தமிழகம் வியாபாரத்திற்கு உகந்த மாநிலமாக திகழ வேண்டும் என்றும், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் 25 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டிய அவர், நிறுவனத்தின் வருவாயில் ஒரு பகுதியை தொடர்ந்து மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version