Gallery

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா…!

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா 19.09.2026 சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோமுத்து இண்டோர் ஸ்டேடியம் (Sri LeoMuthu Indoor Stadium) அரங்கில் நடைபெற்றது.

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (Chairman and CEO) டாக்டர் சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெ.ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கி, கல்வி ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் (Hon’ble Speaker of the Tamil Nadu Legislative Assembly) திரு J.C.D. பிரபாகர் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்… “மாணவர்கள் இங்கு பயின்ற கல்வியை வேலைவாய்ப்பை பெறுவதற்காக மட்டுமின்றி, சமூக முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியம்” என்றார் இந்த விழாவில், 2026 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,451 (1,249 இளநிலை மற்றும் 202 முதுநிலை) மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில், 35 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், புத்தாக்கத்துறை இயக்குநர் ரெனி ராபின், முதன்மை தகவல் அலுவலர் கே.நரேஷ் ராஜ், மாணவர் விவகாரத்துறை டீன் இராஜேந்திர பிரசாத், முதன்மை வணிக அலுவலர் ஆர்.சதீஷ்குமார், வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநர் கே.மாறன் உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ – மாணவியர் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version