Politics
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, நாடெங்கிலும் உள்ள அதிமுக தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் கழக கொடி ஏற்றி வைத்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக சிக்கன் பிரியாணியும், நலத்திட்ட உதவியாக வேட்டி, சேலை மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாவட்ட கழக, ஒன்றிய, பகுதிகளாக செயலாளர்கள், கழகத்தின் மூத்த நிர்வாகிகள், தொண்டர் அணியினர் மற்றும் பிற அணியினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.