Politics

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்

மறைந்த அதிமுக தலைவர்களில் ஒருவரான எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 25) மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, மதுராந்தகம் வந்த முதல்வர் விஜய்யை அமைச்சர் சரத், வேல் கொடுத்து வரவேற்றார்.

பின்னர் மதுராந்தகம் நகர பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். அங்கிருந்த மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு வெள்ளி வேல் கொடுத்து, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வரவேற்றார்.

தமிழ் தாய் வாழ்த்து உடன் பிரச்சாரக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version