Politics

தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?: ஜி.கே.வாசன் பேட்டி!

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடாதது  குறித்து ஜி.கே.வாசன் விளக்கமளித்துள்ளார். 

என்.டி.ஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறது தமாகா. 

இந்தநிலையில் இன்று (மார்ச் 25) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,  “எங்கள் கூட்டணி வெற்றியை களத்தில் உறுதி செய்துகொள்ளும் வகையில்  கடுமையான பணியை ஆற்றுவோம்” என்றார். 

தாமரை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு,  “சைக்கிள் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்த பேப்பர் இன்னும் கிளியர் ஆகவில்லை.  இதன் காரணமாக மற்றொரு சின்னத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி கட்சி சின்னமான தாமரையிலேயே  போட்டியிடுகிறோம்.  நாடாளுமன்றத் தேர்தலில் கூட சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிட்டேன்.   அந்த சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை எங்கள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்” என்று கூறினார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version