General
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம்….!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி உலக மகளிர் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல, இந்த ஆண்டும் மார்ச் 8-ந்தேதி உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்திகளை தெரிவித்துக்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, 2026 மார்ச் 8-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையை அடுத்த, செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் STS பவுண்ட்டேஷன் மற்றும் கோவளம் ஊராட்சி இணைந்து நடத்திய மகளிர் தின விழா கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த மகளிர் தின விழாவில்,
காயின் கலெக்ஷன், பலூன் உடைத்தல்,ரேம்ப் வாக், பன் பட்டர் ஜாம் ஈட்டிங், கயிறு இழுத்தல், லெமன் ஆன் த ஸ்பூன், மியூசிக்கல் சேர், பீச் கால்பந்து, ஜோடிப் புறா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது பரிசாக கேஸ் அடுப்பும், இரண்டாம் பரிசாக மிக்ஸர் கிரைண்டரும், முதல் பரிசாக கிரைண்டரும், சிறப்பு பரிசாக எல்இடி டிவி-யும் வழங்கப்பட்டது. நிறைவாக, அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்ட பங்கேற்பார்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
மகளிர் தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் எஸ்டிஎஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.