Government
தவெக குதிரை பேரம்.. 100 நாள் ஆகியும் தொடர்கிறது! ஆளுநரிடம் புகார்களை அடுக்கிய டிடிவி தினகரன்

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் தவெக பக்கம் தாவ தயாராக இருப்பதாக செங்கோட்டையன் பேசியிருந்த நிலையில், அதற்கு மறுநாளே ஆளுநர் அர்லேகரை சந்தித்து டிடிவி தினகரன் குதிரை பேர விவகாரம் தொடர்பாக புகாரளித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக ஒரு குதிரை பேரம் தொடங்கியது. அன்று இரவே உங்களை சந்தித்து நான் பேசினேன்.\
முடிவுக்கு கொண்டு வரவேண்டும்
ஆளுநரிடம் அதுபற்றி தெரிவித்து இருந்தேன். 100 நாட்கள் ஆகிறது. தொடர்ந்து நடக்கின்ற குதிரை பேரங்கள்.. நேற்று கூட அமைச்சர் ஒருவர் சொல்கிறார். 10 எம்.எல்.ஏக்கள் எங்களை தேடி வரப்போகிறார்கள் என்று.. தவெகவிற்கு போக வேண்டிய காரனம் என்ன? முகாந்திரம் என்ன? என்ன பேரம்.. அவர்களை அமைச்சர்கள் ஆக்கப்போகிறீர்களா? என்ன சொல்லி கூப்டு இருக்கிறீர்கள்.
இது தொடரந்து கொண்டே இருக்கிறது. ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். வாக்களித்த தொகுதி மக்களுக்கு எதிராக அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஆசையிலோ, பணத்து ஆசையிலோ செய்வதை எல்லாம் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக சந்தித்தோம்.
தூய சக்தி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த கட்சி எம்.எல்.ஏக்களை பேரம் பேசி, பொருளாசை காட்டி அவர்களை தங்கள் பக்கம் வளைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. கட்சிகளை பாதிக்கும். இன்னும் சொல்லப்போனால் அரசியல் அடிப்படையையே பாதிக்கிறது.
தொகுதி மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் செயல்படுவதும், பச்சோந்திகள் போல செயல்படுவதும் அவர்களுக்கு ஆசை வார்த்தை சொல்லி ஆட்சி அதிகாரத்தை காட்டி அவ்ர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஓநாய்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவும் தூய சக்தி என்று சொல்லி நம்மை எல்லாம் ஏமாற்றி கொண்டு இருப்பவர்களின் முகமூடியை கிழித்து எறிந்து உண்மை சுயரூபத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறேன். உரிய ஆவண செய்கிறேன் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார்.
எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டு
தமிழ்நாட்டில் மே 8 ஆம் தேதி நடந்ததில் இருந்து இன்று வரை நடப்பதை குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுவதை குதிரை பேரத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக திடீரென மாறுவது ஆளும் கட்சிக்கு ஆதரவாக ராஜினாமா செய்வது இதையெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அன்றில் இருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் . அன்றைக்கே சொன்னேன். எங்களை தொட்டு விட்டீர்கள். விட மாட்டோம் என்று” என்றார்.
முன்னதாக கோபி செட்டிபாளையத்தில் தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் வர தயாராக இருப்பதாக பேசினார். ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியம் ஆகியுள்ள நிலையில் செங்கோட்டையனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.