Politics
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, நாடெங்கிலும் உள்ள அதிமுக தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்.கே.பழனிவேல் தோழமை கட்சியினருடன் இணைந்து கழக கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு சேலையும், கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், 198 வது கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் கே.அன்பழகன், ஜி.நமச்சிவாயம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி கழக செயலாளர் OMR.M.K.சோமு மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, பகுதிகளாக செயலாளர்கள், கழகத்தின் மூத்த நிர்வாகிகள், தொண்டர் அணியினர் மற்றும் பிற அணியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.