Connect with us

Politics

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, நாடெங்கிலும் உள்ள அதிமுக தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 199வது வட்ட கழகத்தின் சார்பில், அம்மா பேரவை முன்னாள் செயலாளர் ஜி.தேவேந்திரன் தலைமையில், ஓடை சுந்தர் நிகழ்ச்சி ஏற்பாட்டில்  அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக-வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும், பண முடிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட கழக, ஒன்றிய, பகுதிகளாக செயலாளர்கள்,  கழகத்தின் மூத்த நிர்வாகிகள், தொண்டர் அணியினர் மற்றும் பிற அணியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.