Connect with us

Politics

தவெக அரசு மீது குற்றம் சுமத்துகிறோமா? – முத்தரசன்

சென்னையில் நெருக்கடி நிறைந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட வேண்டாம், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சொல்வது அரசு மீது குற்றம் சுமத்துவது அல்ல என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விமர்சித்திருந்த நிலையில் அவர் கம்யூனிஸ்ட்கள் அளிக்கும் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட முத்தரசன், சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால், தவெக அமைச்சரவையே கவிழ்ந்துவிடும் என்று எச்சரித்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போது ஆதரவை விலக்கிக் கொள்வார்கள் என அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்குத் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று (செப்டம்பர் 22) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்துப் பேசுகையில்:”பட்டினப்பாக்கம் பகுதி சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய இடமாகும். இங்கு மீனவக் கிராமங்கள் அடர்த்தியாக அமைந்திருப்பதால், அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், ஏராளமான பள்ளிக்கூடங்கள் இயங்கும் இப்பகுதி, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகக் காணப்படும்.

ஆகவே, அப்பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறோம். ஆனால் முதலில் அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டதாகக் கூறுகிறார்கள்; பிறகு, ‘இது முதலமைச்சரின் கவனத்திற்கு இன்னும் செல்லவில்லை’ என்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.

நெருக்கடி நிறைந்த அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட வேண்டாம் என மறுபரிசீலனை செய்யச் சொல்வது அரசு மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல; ஒரு தோழமை உணர்வோடு முன்வைக்கப்படும் கருத்தாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.