Economic
ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஜனவரி 3)மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை, உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனறு காலை ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்த நிலையில் மாலையில் ரூ.640 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் மாலையில் ஒரு கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 60 குறைந்த நிலையில் மாலையில் ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ. 1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 55 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.257க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்த நிலையில் மாலை ரூ.1 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 2-1-2026 | 1,00,640 |
| 1-1-2026 | 99,520 |
| 31-12-2025 | 99,840 |
| 30-12-2025 | 1,00,800 |
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 2-1-2026 | 260 |
| 1-1-2026 | 256 |
| 31-12-2025 | 257 |
| 30-12-2025 | 258 |
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |