Connect with us

Politics

ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்.பிக்கள்.. ஒப்புதல் தந்த மாநிலங்களவை தலைவர் சிபிஆர்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவினர்.

இந்நிலையில் தாங்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 7 எம்.பிக்களும் கடிதம் அனுப்பினர். மேலும் 7 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி கோரியது.

பாஜகவில் 7 பேரும் இணைந்ததை ஏற்று ஒப்புதல் அளித்த மாநிலங்களவைத் தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிராகரித்தார்.

பாஜகவில் இணைந்த 7 எம்.பிக்கள்

  • ராகவ் சத்தா
  • ஹர்பஜன் சிங்
  • சந்தீப் பதக்
  • அசோக் மிட்டல்
  • விக்ரம்ஜித் சாவ்னே
  • ஸ்வாதி மாலிவால்
  • ராஜிந்தர் குப்தா

கட்சித் தாவல் நடவடிக்கை நிராகரிப்பு ஏன்?

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் (10-வது அட்டவணை) விதிகளின்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறொரு கட்சியுடன் இணைந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.