Connect with us

General

அடுத்த தமிழக முதல்வர் யார்?: எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என்பது தெரியவந்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் களமே பரபரப்பாக உள்ளது.

இந்தநிலையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. அதேசமயம் விஜய்யின் அரசியல் வருகை திமுகவுக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில், முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் தவெக தலைவர் விஜய், மூன்றாவது இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நான்காவது இடத்தில் சீமான், ஐந்தாவது இடத்தில் அண்ணாமலை ஆகியோர் உள்ளனர்.

விஜய்யின் வருகையால் யாருக்கு அதிகம் பாதிப்பு என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், திமுகவுக்கு தான் அதிக பாதிப்பு, அடுத்ததாக விசிக மற்றும் அதிமுகவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என முடிவுகள் கூறுகின்றன.

மக்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், முதலில் விஜய்யும், அடுத்ததாக அண்ணாமலை, உதயநிதி, சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3% பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. 234 தொகுதிகளைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கு அதிகமானோரிடம் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 25.6 சதவிகிதம் பேர் 21 முதல் 30 வயதுடையவர்கள். 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுடையவர்கள் 23.5 சதவிகிதம் பேர் 45 முதல் 60 வயதுடையவர்கள் ஆவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Politics1 week ago

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

Copyright © 2025 NowTamil.