Gallery
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 63வது ஆண்டு விழா நடைபெற்றது…..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முட்டுக்காடு முதல் நிலை @ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாமயில்வாகணன் BPT,அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி எம்.மயில்வாகணன் முன்னிலையிலும் 63வது ஆண்டு விழா நடைபெற்றது.

மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜி.விஜயா கோபிநாத்,வார்டு உறுப்பினர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் கிறிஸ்டினா தேன்மொழி, சிறுசேரி ஆசிரியர் எலியா,கழிப்பட்டூர் தலைமை ஆசிரியர் திலகவதி, தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்,,பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Continue Reading