Connect with us

Politics

’எதிர்பாராத வெற்றி கூட்டணி வருது.. நம்ம ஆட்சிதான்’.. குஷிப்படுத்திய இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ”எதிர்பாராத மிகப் பெரிய வெற்றி கூட்டணி அமைய இருக்கிறது.. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.. நிச்சயம் நாம் ஆட்சி அமைப்போம்” என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர இதுவரை வேறு எந்த கட்சிகளும் இணையவில்லை.

அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவதும் சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருமே விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருக்கின்றனர்.

இதனால் அதிமுக மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த பின்னணியில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது.

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையவில்லையே கலக்கத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், “யாரும் எதுக்கும் கவலைப்படாதீங்க.. நிச்சயமா பிரம்மாண்டமான எதிர்பாராத வெற்றிக் கூட்டணியை அமைப்போம். நம்ம ஆட்சிதான் அமையப் போகுது.. அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீங்க தேர்தல் வேலையை மட்டும் செய்யுங்க” என பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அத்துடன், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துல நீக்கப்பட்ட நம்ம வாக்காளர்களை மறுபடியும் சேர்க்குறதுக்கு எல்லோரும் ரொம்பவே முயற்சிக்கனும்.. அந்த வேலையை சீக்கிரமாக முடிக்கனும்” என்றும் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General18 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General18 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics20 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics20 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics23 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.