Connect with us

General

திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார்

திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 16) பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் சேலம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இன்று காலை மதுரையில் பேசிய நாகேந்திரன், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான் ” என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் இன்று பிற்பகலில் நெல்லையில் “திரிஷாவின் கண்டன அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், நான் ஒருபோதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. அத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதும் இல்லை, இதுவரை நான் அவ்வாறு பேசியதும் இல்லை.

அன்று ஒரு குறிப்பிட்ட சூழலில் தற்செயலாக வாய் தவறி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது தவறான ஒரு வார்த்தைதான் என்பதை நான் உணர்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மேலிடம் என்னிடம் பேசியது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இது குறித்து ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார். அதேபோல், நேற்று முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவரும் இந்த விவகாரம் குறித்து என்னிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்த விவகாரத்தில் யாராவது மன வருத்தம் அடைந்திருந்தால், அல்லது யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Politics1 week ago

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

Copyright © 2025 NowTamil.