General
சென்னை, போரூரில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணியின் 30வது கிளை திறப்பு……!
எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை, புத்தம்புது பொலிவுடன் சென்னை, போரூர், ஏகாம்பரம் நாயக்கர் தொழிற்பேட்டையில், எண்.10-ஏ, முதல்மெயின் ரோடு என்ற முகவரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு, 21.06.2026 ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டும் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது.
எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மட்டுமின்றி, எஸ்.எஸ்.பக்கெட் பிரியாணி (மட்டன் மற்றும் சிக்கன்), இந்தியன், சைனீஸ், ஸீ ஃபுட் (கடலுணவு வகைகள்), தந்தூரி, பி.பி.க்யூ (BBQ), அரேபியன் கிரில், பிரைட் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளும் வாரத்தின் ஏழு நாட்களும் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை கிடைக்கும். எங்களது நிறுவனத்தில் பிரியாணி வகைகள் அனைத்தும் விறகு அடுப்பில் தயாராகிறது என்பது கூடுதல் சிறப்பு. எங்களது உணவு வகைகள் அனைத்தையும் www.sshyderabadbiriyani.com என்ற முகவரியில் ஆன்லைன் வழியாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஸ்விகி (SWIGGY) மற்றும் ஜொமேட்டோ (ZOMATO) வசதிகளும் உண்டு. திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா, கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்கள், ஒன்று கூடல் (Get-Together), பணி ஓய்வு நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்கும் சிறந்த முறையில் கேட்டரிங் செய்து தருகிறோம்” என்று இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் அப்துல் சமத் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.