Connect with us

Government

6 எம்.பி. இடங்கள்.. தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவை தேர்தல்! பிப்.26-ல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா தேர்தல்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 26-ந் தேதி தொடங்குகிறது.

10 மாநிலங்களின் 37 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.

இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 26-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

  • வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 26
  • வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள் மார்ச் 5
  • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6
  • வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9
  • போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16
  • வாக்குப் பதிவு நடைபெற்றால் மார்ச் 16- ந் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
  • தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள் மார்ச் 20.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Politics1 week ago

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

Copyright © 2025 NowTamil.