Connect with us

Government

காங்கிரஸுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் : முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜ்யசபா எம்பி யாக இருந்த சிவி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளதால், அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார்.

எனினும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி மூன்று நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்காமல் இருந்தது.

இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மேலிட பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க முதல்வர் விஜய் பரிசீலினை செய்வதாக கூறியிருக்கிறார் என்று கூறினார்.

இந்த சூழலில், வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா எம் பி ஆகிறார் என தகவல்கள் வருகின்றன.

 மாநிலங்களவையில் காங்கிரசுக்கு 29 எம்பிக்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கவுள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General16 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General16 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics18 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics18 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics20 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.