Connect with us

Politics

திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.. செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் திமுக 2-வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பிப்ரவரி 18-ந் தேதி பேசிய செல்வப்பெருந்தகை, “ தொழிற்சாலைகள் நிறைந்த, திருப்பெரும்புதூர் தொகுதியில், பல ரோடுகள் பழுதடைந்து இருக்கின்றன.

நீங்கள் மீண்டும் 2-வது முறை ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் தேர்தலுக்கு முன்பாக, எந்தெந்த சாலைகளை பழுதுபார்க்க வேண்டுமோ அதை பார்த்து தருவார்களா? என்று கேட்க விரும்புகிறேன்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.