Connect with us

Politics

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 195 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்

ஆலோசனைப்படி, சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர், 195 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் தலைமையில், பல்லவன் குடியிருப்பு பேருந்து நிலையம் அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக, 195 வது வட்ட கழகம் சார்பில் இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள்  மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் திமுக-வின் 195 வது வட்டக் கழகச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 195 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், நகரமைப்பு நிலைக்குழு உறுப்பினருமான க.ஏகாம்பரம் சிறப்பாக செய்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.