Connect with us

Politics

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, முட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவருவப்படத்திற்கு, முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக, இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.விஜய கோபிநாத் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள்  மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் திமுக-வின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட பிரதிநிதி மு.மயில்வாகணன் சிறப்பாக செய்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General16 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General16 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics18 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics18 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics20 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.