Connect with us

General

செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்தி வைப்பு!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குக்கான 234 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞரால் சான்றொப்பம் இடப்பட்டவை என்றும் கூறி அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கோபி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General16 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General16 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics18 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics18 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics20 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.